கணக்குப்பதிவு - செப்டம்பர் 2018

கணக்குப்பதிவு - செப்டம்பர் 2018

பதாகை புகழ்: கேத்தரினா லிம்பிட்சௌணி, அஃகேலோஸ் ஜேசூலிஸ்.

FSHM'ன் 2018 - ஆம் ஆண்டிற்கான முதல் கணக்குப்பதிவு அறிக்கை பின்வருமாறு.

இந்த அறிக்கையில் FSHM சமூகம் SFDPY18-க்காக பெற்றுக்கொண்ட நன்கொடைகளும் அதற்கான செலவுக் கணக்குகளும் சமர்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் PDF இணைப்பு: https://files.fshm.in/s/xHt4NNRo9DHZZoo

cashflow_01sep18_06oct_18

கணக்கியல் மற்றும் அறிக்கை GNUcash என்னும் கட்டற்ற மென்பொருள் கருவியை பயன்படுத்தி படைக்கப்பெற்றது.

கட்டற்ற மென்பொருள் தின விழா (Software Freedom Day) மற்றும் வழக்கமான சந்திப்புகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்க்கான முயற்சிகளை மேற்கொண்ட மணிராஜ்-க்கு எங்கள் மனமார்ந்த நன்றி. மணிராஜும் கமலும் ஒருங்கிணைந்து துல்லியமான செலவுக் கணக்குகளை வழங்கியுள்ளனர்.

நிதி தேவை: கட்டற்ற வன்பொருள் மென்பொருள் இயக்கத்திற்கு பின்வரும் அடிப்படைகளுக்கு நிதி தேவைப்படுகிறது.

 1. சந்திப்புகள்-சிற்றிடை உணவு, குடிநீர், குளம்பி/தேநீர்
 2. இணையம், கோப்பு மற்றும் வலைப்பூ சேவைக்கு தேவையான கட்டமைப்பு செலவு,
 3. கட்டற்ற வன்பொருள் மென்பொருள் இயக்கத்தின் கோப்புகள்
 4. எழுதுபொருள்-காகிதம், குறிப்பி
 5. அச்சடித்தல்-கடிதங்கள், கையேடு
 6. மின் மற்றும் பொருந்துதல்கள்-மின்விசிரியை பழுது பார்த்தல்

SFDPY18-னின் செலவுகள்: SFDஐ ஏற்பாடுசெய்ய ஆன இதர செலவுகள்.

 1. அச்சடித்தல்-சான்றிதழ்கள், வண்ண சுவரொட்டிகள், கையெடுகள், அழைப்புக் கடிதங்கள்
 2. எழுதுபொருள்- திரிக்கப்பட்ட A4 உறை.
 3. அஞ்சல் - முறையான அழைப்புக் கடிதங்களை நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு தேவைப்படும் அஞ்சல் தலைக் கட்டணம்.
 4. சலுகை - தொலைவில் இருந்து வரும் தன்னார்வளர்களுக்கு தேவையான உணவு மற்றும் பயணச் செலவுகள்.
 5. உணவு மற்றும் மோர் - சார்ந்த செலவுகள்.